அமைச்சர் மா. சு எச்சரிக்கை : கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்ய கூடாது..!
சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய அளவில் மகப்பேறு இறப்பை ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70 என குறைக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விகிதம் 39 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதில், 56% அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் என தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கர்ப்பிணிகள் பரிசோதிக்கப்படுவர்; சிக்கலான நிலையில் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
தாய்மார்களின் பாதுகாப்பை மேம்படுத்த, நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு பிரிவுகள் அரசு மருத்துவமனைகளில் இயங்குகின்றன. கருக்கலைப்பு மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படாதவாறு மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேலும் மகப்பேறு உயிரிழப்பு விகிதத்தை தேசிய அளவில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70 ஆகக் குறைக்கும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விகிதம் 39 என குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இது மாநிலத்தின் சுகாதாரத் துறையின் முயற்சிகளின் ஒரு முக்கிய சாதனை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசியவர், மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு தொடர்பான மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனையாகாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகப்பேறு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கள நிலை பணியாளர்கள் மூலம், கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டிய பராமரிப்பு, ஆலோசனை, சிகிச்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்புகள் குறைவடைந்து, தேசிய அளவில் முன்னோடியான மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதாக கூறினார்.