1. Home
  2. தமிழ்நாடு

புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து வாங்கப்படும் - அமைச்சர் கோவி.செழியன்..!

Q

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கல்லூரிகளில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சிகள்" ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பசுமைத் தோற்ற முகப்பு மற்றும் ஒரே மாதிரியான கல்லூரி பெயர் பலகைகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
அரசு கல்லூரிகளில் கலைத் திருவிழா தலா ரூ.2 லட்சம் வீதம் ஒதுக்கி ஆண்டுதோறும் நடத்தப்படும். அரசு கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் தலா ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்திட பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும். அரசுக் கல்லூரி மாணாக்கர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்.
அந்தியூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்படும்.
சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு "புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து" ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அருகலை வசதி ஏற்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சங்கிலி இணைப்பு வேலி ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஊடாடும் திறன் பலகைகள் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக, கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான உள்ளிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு மையம் மேம்படுத்தப்படும். முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான வலை முகப்பு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். சென்னை, தரமணி, மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மொத்தம் 39 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

Trending News

Latest News

You May Like