குட் நியூஸ் சொன்ன அமைச்சர் கே.என்.நேரு...அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம்..!

கேள்வி நேரத்தில் போது, வளசரவாக்கம் தொகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா..? என்று சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "சென்னையில் கடந்த ஆட்சி காலத்தில் 900 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1,110 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள தண்ணீர் கோடை காலம் வரை போதுமானதாக இருக்கும். அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கான திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.