1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..!

1

ராசிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மலச்சமுத்திரம், வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளநல்லூர், பட்டணம்,புதுப்பட்டி நாமகிரிப்பேட்டை, மற்றும் சீராப்பள்ளி என 8 பேரூராட்சிகளும், ராசிபுரம் நகராட்சி, மற்றும் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் என 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட 523 குக் கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சம் நபர்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வழங்கப்படும் மிகப்பெரிய திட்டமாகும். மேலும் காவிரி ஆற்றின் கரையில் குதிரை கால்மேடு கதவணைக்கும், நெருஞ்சிப்பேட்டை கதவணைக்கும் இடையில் நடுங்குளம் காட்டூர் எனும் இடத்தில் நீரோட்டம் நிலையத்துடன் கூடிய கிணற்றின் மூலம் எடுக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 1325.29 கிலோமீட்டர் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினோகம் செய்யப்பட உள்ளது.

மேலும் இத்திட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி வைத்துள்ள நிலையில் இந்த திட்ட பணிகள் நவம்பர் 2024 ஆம் ஆண்டில் முடிக்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் 8 பேரூராட்சிகள்,4 ஊராட்சி ஒன்றியங்கள்,1 நகராட்சி என ஏறத்தாழ 523 குக் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற 86 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்,97 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது.

கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் ராசிபுரம் பகுதியில் இது போன்ற ஒரு பெரிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.விழாவின் இறுதியாக 13 துறைகள் சார்ந்த் 544 பயனாளிகளுக்கு 8 கோடியே 12 லட்சத்து 18 ஆயிரத்து 246 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like