அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..! இனி அரசு சேவை இல்லத்தில் பெண் காவலாளி..!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்து சிறுமி ஒருவர் தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லத்தில் தங்கி மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அரசு சேவை இல்லத்தில் தங்கியுள்ள மாணவி காலை எழுந்து தூக்க கழகத்தில் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியால் மூடிக்கொண்டு வந்து மாணவியை வலு கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது மாணவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது அந்த மர்ம நபர் மாணவியை தாக்கியுள்ளார். இதில் மாணவி பலத்த காயமடைந்துள்ளார். மேலும் மாணவியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வலியால் துடித்த மாணவி கத்தி கூச்சலிட்டு உள்ளார். அப்போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த மாணவிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் மாணவி அழைத்த சென்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் மாணவியின் காலிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பொதுவாக தாம்பரத்தில் செயல்பட்ட வரும் அரசு சேவை இல்லத்தில் மதில் சுவர் மிகவும் உயரமானது.
அப்படி இருக்கையில் வெளி நபர்கள் மற்றும் மர்ம நபர்கள் யாரும் உள்ளே வர முடியாத சூழலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் நுழைவாயிலில் காவலாளி மாத்யூ என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார் அவரை தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாதது. இதனால் காவாளி மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் 37 வயதான காவலாளி மாத்யூ தான் இந்த சம்பவத்தை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்தது கிடையாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாணவிகளில் வருகை பதிவு மற்றும் நேரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அரசு சேவை இல்லத்தில் பெண் காவலாளிகளை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்தார்.