#JUST IN : விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு மகன்..!

திருவண்ணாமலை ஏந்தல் பைபாஸில் அமைச்சர் மகனின் கார் இன்று (மே 12) சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கம்பன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் அமைச்சர் எ.வ வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரின் மகன் கம்பனுக்கு என்ன ஆனது என்பது குறித்தான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.