அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது !

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது !

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது !
X

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து ராஜகிரிக்கு புறப்பட்டது.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு அவர் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் வயலில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலிக்கு பின்னர் அரசலாறு அருகே அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் டோல்கேட்டில் மாநில கழக அமைப்புச் செயலாளர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் கூட்டுறவு வங்கி தலைவருமான அண்ணன் வாலாஜாபாத் பா கணேசன், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Next Story
Share it