அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் தேறி வர வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிர்ச்சி !

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலரும்மருத்துவமனைக்கே நேரில் சென்று கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது எனவும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளா பதிவில், ‘கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.
அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!’ என்று பதிவிட்டுள்ளார்.
#Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 26, 2020
அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!
newstm.in