கொரோனாவின் பிடியில் அமைச்சர் துரைக்கண்ணு! நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு !

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தி அறிந்து, அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். அப்போது, அவரது கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிராக மூச்சுத்திணறலால் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைகண்ணு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளனர்.