தொடர்ந்து கவலைக்கிடமாக அமைச்சர் துரைக்கண்ணு! சோகத்தில் குடும்பத்தினர்!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தி அறிந்து, அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். அப்போது, அவரது கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிராக மூச்சுத்திணறலால் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைகண்ணு வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.