உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்- முதல் குரல் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக எம்எல்ஏவும் முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, அன்பில் மகேஷ் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த கால எம்எல்ஏகள் தொகுதி மக்களை பார்க்கவில்லை. அமைச்சர்களுக்கு எல்லாம் ரோல் மாடலாக இருப்பவர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் மட்டும் சொந்தம் கொண்டாடமல் 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பொறுப்புக்கு வர வேண்டும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களை விட பெற்றோர்களே மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய அவர். மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
newstm.in