ரூ.1,86,000 மதிப்பில் செயற்கை காலை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

கும்மிடிப்பூண்டி வட்டம், ஒபுளாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. மாற்றுத்திறனாளி. அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ராஜலட்சுமி கைப்பந்து, குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டவர். தற்போது மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று ராஜலட்சுமி தங்கம் வென்றுள்ளார்.
மாணவி ராஜலட்சுமி ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்தவர் ஆவார். எனவே, செயற்கை கால் கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உதவிகரமாக இருக்கும் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் 'செயற்கை கால்' கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தார்.
இவருடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 6 நாட்களில் மாணவி ராஜலட்சுமியின் வீட்டிற்கு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவருக்கு செயற்கை கால் செய்வதற்கு உரிய அளவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மே 13) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது முகாம் அலுவலகத்தில் ரூ.1,86,000 மதிப்பில் செயற்கைக் காலை மாணவி ராஜலட்சுமியிடம் வழங்கினார்.