மில்க் பியூட்டி தமன்னாவுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா ?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.
அஜித், விஜய், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது இந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார். அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜீ கர்தா’ சீரிஸில் தமன்னா இதுவரை நடித்திடாத வகையில் படு நெருக்கமான காட்சிகளில் நடித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதை தொடர்ந்து நெட்ஃபிக்ஸில் வெளியான ‘லஸ்ட ஸ்டோரிசின்’ இரண்டாவது பாகத்தில் நடித்த தமன்னா, இதுவரை திரையில் முத்த காட்சிகளுக்கு நோ சொல்லிவந்த நிலையில், அந்த ரூல்ஸையும் பிரேக் செய்தார். அதே லஸ்ட ஸ்டோரியில் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் இருப்பதாக பல நாட்கள் கிசுகிசுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மறுத்து வந்த ஜோடி, பின் இருவரும் காதலில் விழுந்ததை உறுதி செய்தனர். தற்போது தமன்னாவின் வருங்கால மாமியார் எப்போது கல்யாணம் என்று கேட்க தொடங்கிவிட்டாராம், அவரின் ஆசையை நிறைவேற்றுவது கடமை என நட்பு வட்டாரத்தில் பேசி வரும் தமன்னா, விரைவில் திருமண செய்தியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.