1. Home
  2. தமிழ்நாடு

சென்னை கொரட்டூரில் லேசான நில அதிர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

1

சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நில அதிர்வை உணர்ந்ததாக கூறி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சுமார் 20 விநாடிகள் கட்டிடம் குலுங்கியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடங்களின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு பீதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துக் குடியிருப்பு வாசிகள் கூறுகையில், “இங்கே கடந்த 2019-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். நள்ளிரவில் 1 மணியளவில் 6வது மாடிக்கு மேல் இருந்து வீடுகள் குலுங்கியுள்ளன. நள்ளிரவு நேரம் என்பதால் முதலில் பலரும் தங்கள் வீடுகளில் மட்டுமே இப்படி இருந்ததாக நினைத்துள்ளனர். அதன் பின்னரே அங்கு அனைத்து வீடுகளும் குலுங்கியுள்ளது தெரிய வந்ததது. 44, 45 என இரண்டு பிளாக்கிலும் இதே நிலை தான்.

Korattur TNHB

அதன் பின்னரே குடியிருப்புவாசிகள் அனைவரும் கீழே வந்தோம். முதலில் நிலநடுக்கம் என்றே நினைத்தோம். ஆனால், விசாரித்த போது தான் தெரிந்தது கொரட்டூரில் வேறு எங்கும் இதுபோல நில அதிர்வு இல்லை எனத் தெரிந்தது. எங்கள் இரண்டு பிளாக்கில் மட்டும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு அங்கே செல்லவே அச்சமாக இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டிலேயே இந்தக் கட்டிடத்தில் சில பாதிப்புகள் இருந்தன. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட போதே இப்படியொரு பிரச்சினை இருந்ததால், இது குறித்து புகார் அளித்தோம். அப்போது பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்து குவாலிட்டி செக் எல்லாம் செய்தார்கள். அவர்கள் அப்போது பிரச்சினை இல்லை என உறுதியளித்தார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இரண்டு கட்டிடங்களில் மட்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஏன் இந்தளவுக்கு அதிர்வு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நிலநடுக்கம் என்றால் கூட அது முடிந்துவிட்டால் தைரியமாக உள்ளே செல்லலாம். ஆனால், இங்கே என்ன பாதிப்பு என்றே தெரியவில்லை. இதனால் மீண்டும் உள்ளே செல்ல தயக்கமாக இருக்கிறது. என்ன பிரச்சினை என்று வல்லுநர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

Korattur

அருகில் இருக்கும் கழிவுநீர் ஆலையில் இருந்து வரும் கேஸ் எங்கள் வீடுகளில் இருக்கும் மின்சாதன பொருட்களையும் பாதிக்கிறது. அதைத் தடுக்க அரசு ஷீட் ஒன்றைப் போட்டுக் கொடுத்தது. இருப்பினும், அதுவும் கூட இரண்டு ஆண்டுகளில் முற்றிலுமாக துருப்பிடித்துப் போய்விட்டது. அந்தளவுக்குக் கழிவுநீர் ஆலையில் இருந்து வரும் கேஸ் வலிமையானதாக இருக்கிறது.

அதன் காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் அச்சமாக இருக்கிறது. உள்ளே விரிசலும் கூட ஏற்பட்டுள்ளது. உள்ளே 222 குடும்பங்கள் உள்ளன. வல்லுநர்கள் உத்தரவாதம் அளிக்கும் வரை உள்ளே செல்ல மாட்டோம். ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் இருக்க முடியாது. 9வது மாடியில் இருந்து பார்த்தால் கீழ்த் தளம் தெரியும் அளவுக்கு பெரிய விரிசல் இருக்கிறது” என்றார்.

Trending News

Latest News

You May Like