1. Home
  2. தமிழ்நாடு

ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வடமாநில தொழிலாளர்கள்..!

1

செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட நிலையில், சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்த போது , கடையநல்லூர் - பாம்பகோவில் சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதியது. இதில் ரயிலின் இன்ஜின் முன் பக்க தகடு சேதமடைந்தது. 

இது குறித்து லோகோ பைலட் தகவல் தெரிவித்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் கல் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் இயங்கி வரும் கல் குவாரி ஒன்றில் பணியாற்றி வரும், சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like