மிடில் பெர்த் புக் ஆகிடுச்சா? மிடில் பெர்த் ரயில்வே விதி என்ன சொல்கிறது?
ரயில் போக்குவரத்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். காரணம், குறைந்த பயணக் கட்டணம் மற்றும் விரைவான பயணம் என்பதே. இவ்வாறு நாம் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்தில் பலருக்கும் பிடிக்காத ஒன்றாக மிடில் பெர்த் இருக்கிறது.
ஏனென்றால், படுக்கை வசதி மற்றும் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 6 + 2 என்ற எண்ணிக்கையில் படுக்கைகள் இருக்கும். இதில் மிடில் பெர்த் இருக்கையைக் கொண்டவர், அனைவரும் தூங்கும் போதுதான் தூங்க முடியும். அனைவரும் எழும்போது, குறிப்பாக கீழ் இருக்கையில் உள்ள நபர் எழும்போது எழுந்திருக்க வேண்டும். இந்த நிர்பந்தத்தின் கீழ்தான் மிடில் பெர்த் இருக்கை உள்ளவர் பயணிக்க முடியும்.
மிடில் பெர்த் ரயில்வே விதி என்ன சொல்கிறது? இப்படிப்பட்ட சங்கடங்களைத்தான் அனுபவிக்க வேண்டும் என ரயில்வே விதிகளும் கூறுகின்றன. இந்திய ரயில்வே விதிகளின்படி, மிடில் பெர்த் இருக்கை கொண்ட பயணி, இரவு 10 மணிக்கு பிறகு தூங்கி, காலை 6 மணிக்கு முன் எழ வேண்டும்.
மேலும், இரவு 10 மணிக்கு முன்பு தூக்கம் வந்தால், கீழ் இருக்கையில் அமர்ந்து கொண்டேதான் தூங்க வேண்டும் என விதிகள் கூறுகின்றன. இதனாலேயே, பெரும்பாலானோர் ரயில் முன்பதிவு செய்யும்போது மிடில் பெர்த் என்பதை விருப்பமாக கொடுப்பதில்லை.
அதேபோல், டிடிஇ எனப்படும் டிக்கெட் பரிசோதகர், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை, அவ்வாறு டிடிஇ இந்த குறிப்பிட்ட நேரத்தில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டால் அவருக்கு எதிராக பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்றும் ரயில்வே விதிகள் கூறுகின்றன.