எம்ஜிஆரின் அண்ணன் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு !!

எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
எம்.சி.சந்திரன்(வயது75) அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்று காலை திடீரென்று உடல் நிலை மோசமடைந்த நிலையில், வென்ட்டிலேட்டர் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனினும் வென்டிலேட்டர் பொருத்த ஏற்பாடு செய்வதற்குள் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எம்.சி.சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
newstm.in