1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை ! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி !

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை ! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி !


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.


கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி கரையோரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17,129 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18,694 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில்,மேட்டூர் அணை 100 அடியை மீண்டும் எட்டியுள்ளது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்கத்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அணையின் நீர்மட்டம் 100.080 அடி. நீர் இருப்பு : 64.944டி.எம்.சியாக உள்ளது. அணைக்கானநீர் வரத்து வினாடிக்கு 20,298 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like