1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்- காரணம் இதுதான்..!!

chennai metro water
மெட்ரோ பணி காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தற்போது சென்னை செண்ட்ரல் முதல் பரங்கி மலை வரையிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.  தற்போது இரண்டாம் கட்ட பணிகள் 116.1 கி.மீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகின்றன.

அதன்படி மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாதைகளில் உயர்மட்டபாதை மற்றும் சுரங்கபாதை வழிகளில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மெட்ரோ பணிகளுக்காக 43 இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால் வளசரவாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

எம்.எம்.டி.ஏ கலானி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி. நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே. நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் சி.ஐ.டி நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

 

Trending News

Latest News

You May Like