1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம் !

1

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (17.10.2024) முதல் வழக்கம்போல் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோவிலிருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாகச் செல்லும் மெட்ரோ ரெயில்சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்குப் புறப்படும்).

• காலை 8 மணி முதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை:

➢ பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோரெயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

• காலை 5 மணி முதல் 8 மணிவரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணிவரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்

• இரவு 10 மணி முதல் 11 மணிவரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like