1. Home
  2. தமிழ்நாடு

தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு..!

1

ஐதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது, "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை. இருந்த போதிலும் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. இதனால் மெட்ரோ ரயில் பயணத்தில் பாலின சமத்துவமற்ற பாகுபாடான நிலை ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ரூ.35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like