1. Home
  2. தமிழ்நாடு

இவர்களுக்கு நாளை மெட்ரோ ரயிலில் பயணம் இலவசம்..!

1

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் மூலமாக தங்கள் பணியிடங்கள் மற்றும் கல்வி இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். வரும் ஜனவரி 26 ஆம் தேதியன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ரயில் மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பை காணும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு 26 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

மேலும் காலை 6:00 மணி வரை 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வழக்கமான முறைப்படி ரயில்கள் இயக்கப்படும். மேலும் அரசு அணிவகுப்பிற்கு கலந்து கொள்வதற்கு மின் அழைப்பிதழ் அட்டைகள் அல்லது  இ டிக்கெட்டுகள் வைத்திருக்கும் நபர்கள் மெட்ரோவில் இலவச கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like