நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்..!
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை (15-08-2025) பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.