1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவில் குளறுபடி.. தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை !

நீட் தேர்வு முடிவில் குளறுபடி.. தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை !


கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. ஆனால் அதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.‘

ஒருசில மாநிலங்களில் தேர்வெழுதிய மாணவர்களை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
நீட் தேர்வு முடிவில் குளறுபடி.. தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை !

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நீட் தேர்வு முடிவில் தவறான மதிப்பெண் இடம்பெற்றிருந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வை எழுதியுள்ளார். அதன் முடிவுகளை பார்த்த மாணவி அதிர்ச்சியில் உரைந்தார். ஏனெனில் மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு அந்த மாணவி வெறும் 6 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக முடிவு வெளியானது.

நீட் தேர்வு முடிவில் குளறுபடி.. தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை !

இதனால் அப்பெண் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் மாணவியின் தேர்வு முடிவை மறுகூட்டலுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மன முடைந்திருந்த அந்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவியின் மறுகூட்டல் முடிவு வெளியானது. அதில் அந்த மாணவி 720 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரியவந்தது. விடைத்தாழ் திருத்தலில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவி ஒருவர்

நீட் தேர்வு முடிவில் குளறுபடி.. தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை !

தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் முதலில் தவறான முடிவை வெளியிட்டதற்கு அரசியல் கட்சியினர், மாணவியின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like