ஆண்கள் சோகம்.. இந்தியாவில் பெண்களே அதிக நாள்கள் வாழ்கிறார்கள் !!
இந்தியாவில் ஆண்களை விடவும், பெண்கள் அதிக காலம் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே கல்வியில் ஆண்களை பின்னுக்கு தள்ளி பெண்களே முதன்மையிடம் பிடிப்பர். அதேபோல் பல்வேறு நிலைகளில் ஆண்களைவிட பெண்களை முதன்மையாக உள்ளனர். இது வரவேற்கதக்க ஒன்றாகும். எனினும் அனைவரும் அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பதே சிறந்த போட்டியாக இருக்கும்.
இந்த நிலையில், ஆண்களை விடவும், பெண்களே இந்தியாவில் அதிக காலம் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உயிரிழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவரங்களை அலசி ஆராய்ந்ததில் இந்த தகவலை இந்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், ஒட்டுமொத்த இந்திய அளவில், பெண்களின் சராசரி ஆயுள் 71.1 ஆண்டுகளாகவும், ஆணின் சராசரி ஆயுள் 68.4 ஆண்டுகளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுவே தலைநகர் டெல்லியில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 75.9 வருடங்களாக உள்ளது. பீகார் மாநிலத்தில் பிறக்கும் ஆண்களின் சராசரி ஆயுள் 68.8 வருடங்களாக இருப்பதாகவும், பெண்களின் சராசரி ஆயுள் 69.6 வருடங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனப்படையில்தான், பீகார் மாநிலத்தில் ஆண்களை விடவும் பெண்கள் 9 மாதங்கள் கூடுதலாக ஆயுளைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
newstm.in