அரைகுறை ஆடையில் இருந்த ஆண், பெண் காவலர் சஸ்பெண்ட்..!
மயிலாடுதுறை காவேரி நகர் அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்பி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெண் காவலர் ஒருவர், இரவு பணியில் இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்து நள்ளிரவில் தொடர்ந்து சத்தம் வந்துள்ளது. இதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் காவலர், ஆயுதப்படை இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நூர்துபிரவீன் வந்து ஒவ்வொரு அறையாக பார்த்த போது ஏசி அறை மட்டும் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை.
நீண்ட நேரம் பலமாக தட்டியபிறகு கதவு திறக்கவே அதில் ஆண், பெண் காவலர்கள் அரைகுறை ஆடையில் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து பெண் காவலர், இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக எஸ்பிக்கு தகவல் தரப்பட்டது. எஸ்பி மீனா உத்தரவின்படி விசாரித்ததில், ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும், இதில் ஆண் காவலர் திருமணமானவரும், பெண் காவலருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து பணியின் போது ஒழுங்கீனமாகவும், தவறாகவும் நடந்து கொண்டதாக 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மீனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.