1. Home
  2. தமிழ்நாடு

சென்னை செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் பரப்பளவில் மெகா விளையாட்டு நகரம்..!

1

தமிழகத்தில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி சென்னை செம்மஞ்சேரி பகுதியில் 105 ஏக்கர் பரப்பளவில் மெகா விளையாட்டு நகரமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இங்கு நீச்சல் வளாகம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளது. இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கு குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் CMDA தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கையைத் தயார் செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like