1. Home
  2. தமிழ்நாடு

மெகா அறிவிப்பு..! வங்கிகளில் 6,128 கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பு..!

1

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபரிலும் நடைபெறும்.

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பேங்க் ஆப் இந்தியா (16 பணியிடங்கள்), கனரா வங்கி ( 40), சென்ட்ரல் வங்கி (90), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (75), பஞ்சாப் நேஷனல் வங்கி ( 35), பஞ்சாப் சிந்த் வங்கி ( 09) என மொத்தம் தமிழகத்தில் 665 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.07.1996 க்கு முன்பாக பிறந்தவர்களும் 01.07.2004 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளவுர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுவை ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருது நகர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும் இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.07.2024 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.. விண்ணப்பிக்க https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/ என்ற இணையதள லிங்கிற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து விண்ண்ப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like