1. Home
  2. தமிழ்நாடு

இந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு முதியவரும் இறந்ததால் ஆளில்லா கிராமமான மீனாட்சிபுரம்..!

1

நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. பொங்கல் பண்டிகைக்கு ரேக்ளா போட்டி நடத்தும் புகழ்பெற்ற ஊர். செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, கீழச்செக்காரக்குடி என நான்கு புறமும் பரந்து கிடக்கும் இந்த ஊரிலிருந்து மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம். வழியெங்கும் மானாவாரி பயிர் செய்யக்கூடிய பகுதியும் முள் காடாக காட்சியளிக்கும் இந்தப் பகுதி நடுவே அமைந்துள்ள தீவு போன்ற பகுதி தான் மீனாட்சிபுரம். குடிநீர், சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஊரை காலி செய்த நிலையில், தற்போது அங்கு பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் வசித்து வந்த 75 வயதான கந்தசாமி, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தவறி விட்டதால், ஆளில்லா கிராமமானது. இதுகுறித்து கந்தசாமியின் மகனிடம் கேட்டபோது தந்தை இறுதிவரை சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் தான் இருப்பேன் என 80 வயதிற்கு மேலாகி அங்கேயே மறைந்து போனார் என்றார். தண்ணீர் தட்டுப்ப்டு, வேலையின்மை காரணமாக மக்கள் ஊரைவிட்டு சென்ற நிலையில், கந்தசாமி மட்டும் சாகும்வரை அங்கேயே இருப்பேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். இவரின் இறப்புக்கு மீனாட்சிபுரம் வந்த மக்கள், குடிநீர் இருப்பதால் இனி இங்கே வந்து வாழ்வதாக உறுதி அளித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like