நாளை இறைச்சி கடைகள் செயல்படாது..!
நாளை இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 21, 2024) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப். 21ஆம் தேதி மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.