நாளை இறைச்சிக் கடைகள்... டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்திற்காகவும் 16ஆம் தேதி உழவர் திருநாளை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 14ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது 17ஆம் தேதியும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் இறைச்சிக் கூடங்கள் இறைச்சி விற்பனையகங்கள் மூடப்படுவது வழக்கம். இதேபோல சில குறிப்பிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதியான நாளை மறுநாள் இறைச்சி கூட்டங்களை மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினங்களில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனுமதி பெற்ற ஓட்டல்களின் பாா்களில் மதுவிற்பனை நடைபெறாது. மீறி விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.