1. Home
  2. தமிழ்நாடு

இன்று இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு ..!

1

 “வள்ளலார் தினம்” அனுசரிக்கப்படுவதால் அந்நாளில்  தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை  மூடப்பட வேண்டும். 

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே போல் இன்று வள்ளலார் தினத்தையொட்டி சாராயம், கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like