1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் இறைச்சி மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

1

தமிழகத்தில் முக்கியமான நாட்களில் மதுக்கடைக்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
 

இந்நிலையில், தமிழ்நாட்டில் பகவான் மகாவீரர் ஜெயந்தி தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமாகும். இதுகுறித்த அறிவிப்பினை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பார்கள்.. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக்கூடங்களையும் மூட பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like