1. Home
  2. தமிழ்நாடு

இன்று மேயர் பிரியா தலைமையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்.!

Q

சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா கடந்த 2022 மார்ச் 4-ம் தேதி பதவியேற்றார். அதைத்தொடர்ந்து குறுகிய காலகட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து 2023 மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் ‘மக்களைத் தேடி மேயர்’, மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை உயர்த்தியது உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்.21) சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது. வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், சென்னை மக்களை கவரும் வகையிலான சில அறிவிப்புகளும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நாளை (பிப்.22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வரவு செலவு திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like