1. Home
  2. தமிழ்நாடு

மயிலாடுதுறை பரபரப்பு! பாமக மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..!

Q

வன்னியர் சங்க மாநில மாநாடு இன்று மே 11ஆம் தேதி திருவிடந்தையில் நடைபெற உள்ளது. கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் இந்த மாநாடு, பாமக தொண்டர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பாமக கட்சியில் பல்வேறு உட்கட்சி மோதலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், கட்சி பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தொடர்ந்து விழுப்புரம், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளில் பாமக "கோட்டைகள்" எனக் கூறப்படும் பகுதிகளில், திருவிழா போல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ஏற்பட்ட வன்முறையால் நான்கு உயிரிழப்புகள் நடந்தன. அதன் பின்னர் பாதுகாப்பு காரணமாக மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, 42 நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பாமக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகை தர உள்ளனர்.

Trending News

Latest News

You May Like