1. Home
  2. தமிழ்நாடு

சிறுமி மீது தான் தவறு: மயிலாடுதுறை கலெக்டர் சர்ச்சை பேச்சு..!பாடகி சின்மயி கண்டனம்..!

Q

போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகா பாரதி பேசியதாவது:
கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தில் அந்த குழந்தையே தப்பா நடந்திருக்கிறது. அது நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். எனக்கு கிடைச்ச ரிப்போர்ட்படி, காலையில் அந்த பையன் முகத்தில் குழந்தை துப்பி இருக்கிறது. அது தான் காரணம்.
இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தடுப்பு தான் முக்கியம். பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கலெக்டரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பின்னணி பாடகி சின்மயி வெளியிட்ட பதிவு:
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மூன்றரை வயது குழந்தையை கலெக்டர் குறை சொல்கிறார். இந்த அதிகாரி, கற்பழிப்பு மன்னிப்பு பிரிவில் சிறப்பு பயிற்சி எடுத்திருப்பார் போலிருக்கிறது. பாலியல் குற்றவாளி கொண்டாடப்படுவது தமிழகத்தில் புதிதில்லை. அது கலாசாரத்திலேயே இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, 'குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அவ்வாறு பேசினேன்' என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like