1. Home
  2. தமிழ்நாடு

'மாயி' படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் காலமானார்..!நடிகர் சரத்குமார் இரங்கல்..!

Q

ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் திரைப்படத்தின் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கேவி.பாண்டியன். அதன் பிறகு தன்பெயரை சூரிய பிரகாஷ் என மாற்றிக்கொண்டு மாயி, திவான், அதிபர், வருஷநாடு ஆகிய படங்களை இயக்கினார். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், "எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்இயக்குநர் சூர்ய பிரகாஷ் இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான எடப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like