1. Home
  2. தமிழ்நாடு

மே 12ம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை..!

1

மதுரை சித்திரை திருவிழா வரும் 28ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள் வரும் மே 12 ஆம் தேதி வைகை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் காண்பதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடுவார்கள். மக்களின் வசதிக்காக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளக் கூடிய மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.

மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழாக்கள் நடைபெறுகிறது.

Trending News

Latest News

You May Like