1. Home
  2. தமிழ்நாடு

உடனே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் : சீமான்..!

1

நாம் தமிழர்  சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தினை 1,075 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் எதிர்த்து வரும் நிலையில், அதனை துளியும் மதிக்காமல் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி உள்பட இன்னும் பல்வேறு அனுமதிகள் பெறவேண்டிய நிலையிலும் கூட பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையினை தற்போது தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிடவேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் விரைவு நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியதாகும். இந்த திட்டத்தை எவ்வாறேனும் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற குறுக்கு வழி நடவடிக்கைகளில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு விட்டுவிட்டு போராடும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் இன்னல்களை கேட்டறிந்து இந்த திட்டத்தினை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like