1. Home
  2. தமிழ்நாடு

கேரள வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு : உதவி எண்கள் அறிவிப்பு!

11

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, முண்டக்கை டவுன், சூரல்மலா ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலச்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் 400 குடும்பங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் பாலம் நிலச்சரிவில் சேதமடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பி

300 மில்லி மீட்டர் அளவு மழை அங்கு ஒரேநாளில் பெய்த காரணத்தினால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இன்றும் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

நிலச்சரிவு தொடர்பாக தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like