பிரான்ஸ் தேவாலயத்தில் படுகொலை! பிரதமர் மோடி கண்டனம்!
பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த படுகொலைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் நைஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ளே நுழைந்த நபர் ஒருவர், திடீரென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.45 வயதான வின்சென்ட் லோக்ஸ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மற்ற இரண்டு பெண்களும் பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தேவாலயத்திற்குள் நுழைந்து அந்த நபரை சுட்டுப் பிடித்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் பெயர் தாரி என்றும் அவர் ஆப்பிரிக்காவின் துனிசியா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த இந்த படுகொலைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா என்றும் துணைநிற்கும் என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.