மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது..!!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊட்டியில், அருகே உள்ள கிளென் மார்கன் அணை அதன், முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து சுமார் 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும் மூழ்கியுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.