இன்று கோவை வரும் முதலமைச்சர் கட்டாயம் வெள்ளலூர் வரவேண்டும் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்..!
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை பல ஆண்டுகளாக முழுவதுமாக தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. கடந்த முறை மார்ச் மாதத்தில் கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவுள்ளார் என செய்தி வெளியான போதே, அவர் வெள்ளலூருக்கு வந்து அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் அங்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் வருகைக்கு முந்தைய தினம் காலை 9 மணி முதல் அந்த இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் கோவை மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வருவதற்கு நேரம் இல்லை என கூறி இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தனர்.
மேலும் இந்த முறை கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த குப்பை கிடங்கு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சொல்லப்பட்டது.
அதற்கு அவர்கள், அமைச்சர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி எந்த பலனும் கிடைக்காவிட்டால் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சரைவெள்ளலூருக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்து மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் எனகூறி போராட்டத்தை முடித்தனர்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கோவை மாநகருக்கு வருகை தரவுள்ளார் என்பதால் அவர் வெள்ளலூர் வரவேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர் வந்து குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் எனவும், அதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் அந்த இயக்கத்தினர் ஆட்சியரை இன்று சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளனர். குப்பைக்கிடங்கால் அங்கு வாழ்வதே மிக துயரமாகவும் கொடுமையாகவும் உள்ளதால், குப்பை கிடங்கிற்கு அவர் சென்று ஆய்வு செய்தால் இதற்கான தீர்வு கிடைக்கும் என தாங்கள் நம்புவதாக கூறினர்.
எனவே இன்று கோவை வரும் முதலமைச்சர் குப்பைக்கிடங்கு பிரச்சனைக்கான தீர்வை அறிவிக்கவில்லை என்றால், அடுத்த முறை அவர் கோவை வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் பேட்டி கூறியுள்ளார்.