1. Home
  2. தமிழ்நாடு

செவ்வாய் பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

1

தைரியம், ஆற்றல், உத்வேகத்திற்கு பெயர் பெற்ற செவ்வாய் கிரகம்; ஆளுமை, தலைமைப் பண்பு, புதுமைக்கு பெயர் பெற்ற சிம்ம ராசியில் இணையும் இந்த நிகழ்வு, சொந்த ராசி உட்பட மற்ற ராசிக்காரர்களுக்கும் மாற்று பலன்களை அளிக்கிறது. சிம்ம ராசியுடன் செவ்வாய் இனைய, ஆற்றல் இரட்டிப்பாகுவதோடு, செய்யும் காரியங்களில் வேகம் மற்றும் தைரியமும் அதிகரிக்கும். இருப்பினும், இந்த சேர்க்கை குறிப்பிட்ட இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணிக்கின்றனர்.

 மேஷம், ரிஷபம், கடகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களின் வாழ்வில் கடுமையான சவாலை கொண்டுவர இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, இந்த 5 ராசிக்காரர்களின் மன நிலை மற்றும் ஆரோக்கிய நிலையில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கவுள்ளார். பொருளாதார நிலையிலும் எதிர்பாராத பின்னடைவை உண்டாக்கவுள்ளார்.

மேஷம்

​சிம்ம ராசியில் குடியேறும் செவ்வாய், மேஷ ராசிக்காரர்களின் 5-வது வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறார். இந்த மாற்றம் ஆனது குழந்தை நலம், காதல், அறிவாற்றல் மற்றும் குடும்ப உறவுகளை குறிக்கும் இடம் ஆகும். செவ்வாயின் இந்த சஞ்சாரம், மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்க கூடும். கணவன் - மனைவி இடையே காணப்பட்ட பரஸ்பர புரிதல் குறையும், உறவில் சந்தேகம் மற்றும் சண்டைகள் அதிகரிக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் பின்னடைவு காண்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்த விஷயத்தில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். மன கவலை, மன அழுத்தம் நிலவும் இந்த காலத்தில், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் சிரமப்படலாம். இந்த குழப்பங்கள், உங்களை தவறான முடிவுகளை எடுக்க தூண்டலாம். பதற்றத்தை குறைத்து, நிதானமாக சிந்தித்து முடிவு எடுப்பதன் மூலம், எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.


கடகம்

சிம்ம ராசியில் குடியேறும் செவ்வாய், கடக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறார். இது, நிதி நிலை, குடும்பத்தின் ஆரோக்கியம், பேச்சாற்றலை குறிக்கும் இடமாகும். செவ்வாயின் இந்த பெயர்ச்சி, உங்கள் பேச்சில் பதற்றத்தை உண்டாக்கும், நிதானத்தை பாதிக்கும். சிந்திக்காமல் பேசும் வார்த்தைகள் குடும்பத்திற்குள் விரிசலை உண்டாக்கும், மன அமைதியை சிதைக்கும். பண விரயம் உண்டாகும் என்பதால் தேவையற்ற முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போதுமான லாபம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும், புதியவர்களின் கூட்டாண்மை பாதகமாக சூழலை உண்டாக்கும். எனவே, பணம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை சேமிக்க தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது; அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்து மன அழுத்தம் இல்லா வாழ்வுக்கு வழி காணுங்கள்.


ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களின் 4-வது வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி. இதன் விளைவாக ரிஷப ராசிக்காரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடல் நலன் பின்னடைவு காணும்; மன அழுத்தம், குழப்பம் நிறைந்த ஒரு காலமாக இது அமையும். தொழில் வளர்ச்சி தடைப்படும், வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திப்பீர்கள், பணி இடத்தில் மேலதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். உங்கள் பணிகள் மீது குற்றம் சுமத்தப்படும். சொந்து, வாகனம் மற்றும் வீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் தடைகள் உண்டாகும். வெளிப்படையான பேச்சுக்கள் குடும்ப உறவுகள் மத்தியில் மன கசப்பை உண்டாக்கும். பதற்றத்துடன் செய்யும் ஒவ்வொரு விஷயமும், ஆபத்தில் முடிவடையும். இந்த இக்கட்டான காலத்தை, பொறுமையாகவும், நிதானமாகவும் கடப்பது நல்லது. முக்கியமான ஒப்பந்தங்கள், முடிவுகளை தற்போதைக்கு ஒத்தி வைப்பது நல்லது!


மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் எட்டாம் வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறார். விபத்து, மனக்கவலை, மாற்றத்தை குறிக்கும் இடமாக பார்க்கப்படுகிறது. குடும்ப சூழ்நிலை உங்கள் மன கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும்; உங்கள் இரவு உறக்கத்தை பாதிக்கும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் அதே நேரம், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். திடீர் செலவுகள் அதிகரிக்கும், எனவே தேவையற்ற விஷயங்களை முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக, அறிமுகமற்ற தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். சவால்கள் நிறைந்த வேலைகளை தற்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. விபத்து உண்டாவதன் வாய்ப்பு இருப்பதால், வாகனத்தை இயக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாதுகாப்பை உறுதி செய்யும் உபகரணங்களுடன் பயணம் மேற்கொள்வது நல்லது.


கும்பம்

சிம்ம ராசியில் குடியேறும் செவ்வாய், கும்ப ராசிக்கார்களின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறார். இது குடும்ப உறவுகளை குறிக்கும் இடம் ஆகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி, கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை அதிகரிக்க கூடும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. வாழ்க்கை துணையோடு மட்டும் அல்ல, தொழிலில் துணை நிற்கும் கூட்டாளர்களுடனும் கருத்து மோதல் உண்டாகலாம். இது, உங்கள் தொழிலை பாதிக்க கூடும். வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைப்பது சிரமான காரியமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன், ஒன்றுக்கு நூறு முறை சந்திப்பது நல்லது - பதற்றமான சூழ்நிலையில் எடுக்கும் முடிவுகள், ஆபத்தில் முடிவடையும்.

Trending News

Latest News

You May Like