கடன் பிரச்சனையில் இருந்து மீள ஆடி செவ்வாய் பரிகாரம்..!
கடன் தொடர்பான எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடிய கிரகங்கள் என்று சில கிரகங்கள் இருக்கும். அவற்றில் மிகவும் முக்கியமான கிரகங்களாக திகழக்கூடியவை சனி பகவான், செவ்வாய் பகவான் மற்றும் கேது பகவான். அதனால் நாம் இவர்கள் மூவருக்குரிய நேரத்தில் சிறப்பான வழிபாடுகளை செய்யும் பொழுது கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது.
அதனால் தான் செவ்வாய்க்கிழமையில் வாங்கிய பணத்தை திரும்பத் தருவதன் மூலம் விரைவிலேயே கடனை அடைத்து விட முடியும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் சனிக்கிழமை யாரிடம் இருந்தும் கடன் வாங்கக்கூடாது வாங்கினால் அது பெருகிக்கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடன் பிரச்சினை தீர்வதற்காக செவ்வாய்க்கிழமையில் கேது பகவானுக்குரிய நேரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அது மிகுந்த பலனை தரும். அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது சாதாரண செவ்வாய்க்கிழமை செய்வது விட பல மடங்கு பலனை பெற முடியும்.
கேது பகவானுக்குரிய நேரமாக கருதப்படுவது தான் எமகண்ட நேரம். செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் என்பது காலை 9 மணியிலிருந்து 10:30 மணி வரை இருக்கிறது. கேது பகவானுக்குரிய தானியமாக திகழ்வது கொள்ளு. வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால் அந்த பருப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை கொள்ளு பருப்பு இல்லை என்றால் கடையிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமகண்ட நேரம் தொடங்கிய பிறகு வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் கொள்ளை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு மேல் பத்து ரூபாய், இருபது ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என்று எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். இப்படி வைத்து விட்டு முழு மனதோடு கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் விரைவிலேயே கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். எமகண்ட நேரம் தொடங்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்துவிட்டு எமகண்ட நேரம் நிறைவடைவதற்கு ஒரு சில மணித்துளிகளுக்கு முன்பாக இந்த கொள்ளு பருப்பின் மீது இருக்கக்கூடிய பணத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாரமும் இப்படி கொள்ளு பருப்பின் மீது பணத்தை வைத்து வழிபாடு செய்து விட்டு எமகண்ட நேரம் முடிவதற்குள் அதை எடுத்து கவரில் போட்டு வைத்து விடுங்கள். இந்த பணத்தை சேர்த்து வைத்து எப்பொழுது கடனுக்குரிய தொகையை திருப்பித் தருகிறோமோ அப்பொழுது இந்த பணத்தையும் சேர்த்து தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை நிறைவு செய்த பிறகு கொள்ளு பருப்பை நாம் நம்முடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பறவைகளுக்கு தானமாக தந்து விடலாம்.
கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு சாதாரண செவ்வாய்க்கிழமையில் செய்யக்கூடிய பரிகாரத்தை விட ஆடி செவ்வாயில் செய்யக்கூடிய பரிகாரம் விரைவில் பலனைத் தரும். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்
.png)