1. Home
  2. தமிழ்நாடு

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பியா..!

1

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தில் வசித்து வருபவர் கோட்டா ஆனந்த் பாபு. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

Private parts

இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி மாலை ஆனந்த் பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசித்துள்ளார். கணவன் ஆனந்த் பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு 2வது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கணவன் ஆனந்த் பாபுவிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வீரம்மா தனது கணவன் ஆனந்த் பாபுவின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். மனைவியின் செயலால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் பாபு அலறி துடித்துள்ளார்.

Police

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்ப க்கத்தினர் விரைந்து வந்து ஆனந்ந் பாபுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like