விரைவில் திருமணம்.. ஆனால் சுற்றிவளைத்து திமுக பிரமுகர் வெட்டி கொடூர கொலை !

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளையும் பராமரித்து வருகிறார். தஞ்சையில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பாலச்சந்தர் தனது பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாயு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை விரட்டியது.
இதனை அறிந்த அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல காரில் ஏறியபோதும் உடனடியாக செல்லமுடியவில்லை. இதனால் அவரை சுற்றிவளைத்த அக்கும்பல் காருக்குள் வைத்தே பாலச்சந்தரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு அதிமுக பிரமுகர் தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in