திருமணமா..? எனக்கா ..? அனிருத் போட்ட கூல் டுவிட்..!

அனிருத், பிரபல துணை நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ஒரு வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தம். இப்போது பிசியாக கூலி, மதராஸி, ஜன நாயகன், ஜெயிலர் 2 என்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதை தாண்டி, நாடு நாடாக சென்று ‘ஹுக்கும்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
எந்த சினிமா செலிபிரிட்டியை எடுத்துக்கொண்டாலும், அவர்களை சுற்றி ஏதேனும் திருமணம் அல்லது காதல் குறித்த வதந்திகள் சுழல்வது வழக்கம். கடந்த ஆண்டு கூட, கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய சிலர், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறி வந்தனர். இறுதியில் கீர்த்தி தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.
அனிருத் திருமணம் குறித்து இதுவரை நிறைய வதந்திகள் வலம் வந்துள்ளது,
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025