1. Home
  2. தமிழ்நாடு

50 இளைஞர்களிடம் திருமண மோசடி: பெண்கள் உட்பட 5 பேர் கைது.. பகீர் பின்னணி !

50 இளைஞர்களிடம் திருமண மோசடி: பெண்கள் உட்பட 5 பேர் கைது.. பகீர் பின்னணி !


இளம்பெண் உள்பட பலரும் கூட்டாக சேர்ந்து திருமண மோசடி செய்து பணம் பறித்து வந்த பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் போத்தநாயகம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் அண்மையில் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை காவல்துறையில் புகார் ஒன்று அளித்தார். திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பணம் பறிபோனதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன்படி ஒரு கும்பல் திருமண ஆசைக்காட்டி மோசடி செய்வதையே வழக்கமாக வைத்திருந்ததும் இதனை பயன்படுத்தி பணம் பறித்து வந்ததம் விசாரணையில் தெரியவந்தது. தீவிர விசாரணை தேடுதலுக்கு பிறகு திருச்சூர் வாணியம்பாறை சேர்ந்த சுனில் (40), பாலக்காடு கேரளச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (40), வடக்கஞ்சேரி சஜிதா (32), காவில்பாட்டை சேர்ந்த (தேவி) 60, காவச்சேரியை சேர்ந்த சாஹீத (36) ஆகியோரை கைது செய்தனர்.

50 இளைஞர்களிடம் திருமண மோசடி: பெண்கள் உட்பட 5 பேர் கைது.. பகீர் பின்னணி !

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணை அதிகாரிகள் கூறுகையில்: புகார்தாரர் மணிகண்டன் தன் திருமண ஆலோசனையுமாக திருமண ப்யூரியோவை தொடர்பு கொண்டுள்ளார். இதையறிந்த கும்பல் அவரை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்காக மணிகண்டனை பெண் பார்ப்பதற்காக பாலக்காடு மாவட்டம் கோபாலபுரத்திற்கு வரவழைத்தனர். அங்கு சஜிதாவை திருமண பெண் போன்று அலங்காரம் செய்து காண்பித்தனர்.

அப்பெண்ணை பார்த்ததும் மணிகண்டன் பிடித்து விட்டதாக கூறி திருமணத்துக்கு ஓகே சொல்லியுள்ளார். ஆனால், அவரிடம் பெண்ணின் தாய்க்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அன்றே திருமணம் நடத்தலாம் என்று உறவினர்களாக நடித்த கும்பலை சேர்ந்த மற்றவர்கள் கூறியுள்ளனர். பின்னர் கோபாலபுரத்தில் வைத்தே திருமணம் நடத்தினர்.

50 இளைஞர்களிடம் திருமண மோசடி: பெண்கள் உட்பட 5 பேர் கைது.. பகீர் பின்னணி !

இதனை பயன்படுத்தி ஆசைக்காட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் புகார்தாரரிடம் இவர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து அன்றே சஜிதாவும் சகோதரனாக வேடமிட்டு கார்த்திகேயனும் மணிகண்டனுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அடுத்த நாள் தாய்க்கு உடல்நிலை மோசமானதாக கூறி சஜிதாவும் கார்த்திகேயனும் ஊருக்கு திரும்பி வந்தனர்.

ஆனால் அதன்பின்னர் அவரைகளை தொடர்புகொள்ள முடியவில்லை. அனைவரின் செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர் ஏமாற்றப்பட்டுள்ளது அறிந்தனர். இதனைத் தொடர்ந்தே புகார் அளித்தார். தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. அதேநேரத்தில், இதேபோன்று இக்கும்பல் சுமார் 50 திருமண மோசடிகள் நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனை மோசடி கும்பல் இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

50 இளைஞர்களிடம் திருமண மோசடி: பெண்கள் உட்பட 5 பேர் கைது.. பகீர் பின்னணி !

வேறு யாரையெல்லாம் ஏமாற்றியுள்ளனர் எவ்வளவு பணம் பறித்துள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like