1. Home
  2. தமிழ்நாடு

காவல்துறையிடம் அத்துமீறிய மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! கூடவே ஒரு கண்டிஷன்..!

1

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் லூப் சாலையில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, வேளச்சேரியை சேர்ந்த சந்திர மோகன் என்பவரும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

Trending News

Latest News

You May Like